விமானப்படைக்கு நான்கு ஹெலிகளை வாங்க அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை விமானப் படையினருக்கு நான்கு ஹெலிகளை வாங்குவதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச ஏலத்தின் மூலம் விமானப் படையினர் பயன்படுத்துவதற்கு நான்கு ஹெலிகளை கொள்வனவு செய்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தற்போது இலங்கை விமானப் படையினர் பயிற்சிக்காகப் பயன்படுத்தி வரும் இரண்டு ஹெலிகளும், 1981ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை.  அவை பழமையானவை என்பதால், அவற்றுக்குப் பதிலாக புதிய நான்கு ஹெலிகள் பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அமைச்சர் கூறினார்.

தற்போது இலங்கை விமானப் படையினர், ஐ.நா.அமைதி காக்கும் படையில் பணியாற்றி வருவதால், இந்தக் ஹெலிகள் அவர்களின் பயிற்சிக்கு அவசியமாக உள்ளது எனவும் அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!