90 அலகுகளுக்கு உட்பட்ட மின்பட்டியலுக்கு 25% கழிவு – அமைச்சரவையில் முடிவு

பட்டியல் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வாகப் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, அதற்குப் பொறுப்பான அமைச்சர்  என்ற வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் இணைந்து சலுகைப் பொதியொன்றை அமைச்சரவையில் முன்வைத்தனர் என்று அவர் கூறினார்.

இதில், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களிலும், 0 – 90 வரையான அலகுகளைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25% கட்டண கழிவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கட்டனத்தைச்  செலுத்துவற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கும் அதில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தாமதமாகக் கட்டணம் செலுத்துவது தொடர்பில் எவ்வித அபராதமும் அறவிடுவதில்லை எனவும், எந்தவொரு காரணத்துக்காகவும் மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை எனவும் அந்தச் சலுகைப் பொதியிலுள்ள யோசனையில் உள்ளடங்குகின்றது எனவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!