தீப்பிடித்த மெலனியா ட்ரம்பின் சிலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்பின் சிலை ஒன்று ஸ்லோவேனியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகே உள்ளது. மரத்தினால் செய்யப்பட்ட அந்த சிலை கடந்த 4 – ஆம் திகதி இரவு தீவிபத்திற்கு உள்ளானது.
மெலனியா ட்ரம்பின் சிலையை நிறுவிய அமெரிக்க கலைஞரான பிராட் டவுனி, அது எரிக்கப்பட்ட பின்னர் பீடத்தில் இருந்து அதை அகற்றினார்.
வாஷிங்டனில் உள்ள மெலனியா ட்ரம்பின் அலுவலகம் இது குறித்து எந்த விபரமும் தெரிவிக்கவில்லை.