நம்பிக்கை குறைந்து வருகிறது – சாய் பல்லவி
மனித இனத்தின் மீதான நம்பிக்கை தமக்கு வேகமாக குறைந்து வருவதாகச் சொல்கிறார் சாய் பல்லவி.
குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்நிலை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தமது அண்மைய டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“பலவீனமானவர்கள் காயப்படுத்தப்படுகின்றார்கள். சிலர் தங்களது அரக்கத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள குழந்தைகளைக் கொல்கிறார்கள்.
நாம் கடக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை மனித இனத்தைச் சுத்திகரிக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது.
இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற, மோசமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த மனிதத்தன்மையற்ற உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானது அல்ல” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.