சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை

 

 சீனவின் சமூக ஊடக செயலிகளுக்குத் தடை விதிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதன் வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.  

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளில் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை எனக் கூறப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி உளவு வேலை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு முதல் இந்த முடிவை வெளியிட தான் விரும்பவில்லை என்றும் ஆனால் ஆலோசனை நடந்து வருவதாகவும் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக போர், கொரோனா தொடர்பான சர்ச்சை, ஹொங்கொங்கில் சீனாவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஹொங்கொங்கிற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதையடுத்து, சமூக வலைத்தளத்தில் சீனாவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களைக் கைது செய்யும் முயற்சி   மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்னும் சில நாட்களில் ஹொங்கொங் சந்தையிலிருந்து வெளியேறவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

 இந்திய – சீன எல்லைப் பிரச்சைனைக்குப் பின்னர் சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!