ராஜபக்ஷக்களின் ஆட்சியில் சமஷ்டிக்கு இடமேயில்லை – லக்ஸ்மன் யாப்பா

“வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் கோருவது போன்று ராஜபக்ஷ அரசு ஆட்சியில் இருக்கும்வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஷ்டிக்கு இடமளிக்காது.”

– இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

“மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளுக்கான தீர்வைத் தேடுவதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வைத் தேடுவதாயின் எப்போதும் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காது” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு புதிய நடவடிக்கைக்கும் இந்த அரசு இணங்காது. தெற்கிலுள்ள மக்களுக்கும் வடக்கிலுள்ள மக்களுக்கும் சமமான முறையில் மகிழ்ச்சியை வழங்கக்கூடிய வகையிலான தீர்வுக்கு மாத்திரம் செல்வோமோ தவிர ஒரு தரப்பினர் மாத்திரம் மகிழ்ச்சியடையக்கூடிய தீர்வுக்குச் செல்லமாட்டோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!