மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை ராஜபக்ச அரசுக்குப் பெரும் சவால் – கே.டி.லால் காந்த

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 125 ஆசனங்களைக்கூட பெறமாட்டாது. தேர்தலின் பின்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிலையான அரசை அமைப்பதில் பெரும் சவால்கள் காணப்படும்.”

–  என தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேட்பாளர் கே.டி.லால் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்சக்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் தம்மால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறிக் கொண்டிருந்தனர். தற்போது பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டைப் பெறுவோம் என்கின்றனர். ஆனால், 2010 ஆம் ஆண்டு போரை நிறைவு செய்தபோதுகூட ராஜபக்சக்களால் மூன்றிலிரண்டைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!