உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடப்பதே வடக்கு மாணவரின் விருப்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி நடத்த வேண்டுமா அல்லது ஏதும் மாற்றம் செய்யப்பட வேண்டுமா எனத் தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளின் உயர்தர மாணவர்களிடம் இரு நாட்களாகக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்புப் பெறுபேறுகள் உடனுக்குடன் மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேநேரம், மேலும் பல பாடசாலைகளில் இணைய வழியிலும் கருத்துக் கணிப்புக்களை அரசு பெற்றுக்கொள்கின்றதோடு நாடு தழுவிய வகையிலும் மாணவர்களிடையே கருத்துக் கணிப்புகள் கடந்த இரு நாட்களாக அது மேற்கொண்டு வருகின்றது. உயர்தரப் பரீட்சை மேற்பார்வையாளர்களான ஆசிரியர்களிடமும் இதே கணிப்பு இடம்பெறுகின்றது.
கருத்துக் கணிப்பின் தேசிய ரீதியிலான முடிவுகள் நாளைமறுதினம் 10 ஆம் திகதி கல்வி அமைச்சால் வெளியிடப்படவுள்ளன.
வடக்கு மாணவர்களில் அதிகளவானோர் உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்குமாறே கோரிக்கை விடுக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.