கதிர்காமம் ஆலய ஆடிவேல் விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/kathir-1024x768.jpg)
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இம்மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதாரப் பிரிவின் வழிகாட்டல் ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்படும்..
இம்முறை ஆடிவேல் விழாவை முன்னிட்டு பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லையில் முழுமையாக பொதுமக்களுக்கு மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கிலிருந்து உகந்தை குமண– யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாகச் செல்வோரு அனுமதி வழங்கப்படமாட்டாது. என மொனராகலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.