கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட ஏழு பேரின் சடலங்கள் இலங்கைக்கு வந்தன
கட்டாரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விஷேட விமானத்தில் ஏழு இலங்கைப் பிரஜைகளின் சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக சர்வதேச விமான நிலையத்தின் வைத்தியப் பிரிவின் பேச்சாளர் மதுக விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பணி புரிந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டனர். ஒருவர் தற்கொலை செய்தார். மற்றைய மூவரும் வெவ்வேறு காரணங்களினால் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்களே கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய சுகாதார வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் களனி பியகம வீதி, விகாரையை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய கணவனும், அவரது 55 வயதுடைய மனைவியும், 34 வயதுடைய மகளும் ஆவர். இவர்கள் மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சடலங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.