பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கொரோனாத் தொற்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் “எனக்குக் கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.