சீனாவை மிரட்டுகிறது பிளேக் நோய்
கொரோனாவில் இருந்து மீள்வதற்கிடையில் கொரூரமான பிளேக் நோயும் சீனாவில் தலை காட்டத் தொடங்கியதால் அரசும், மருத்துவ நிபுணர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரஸின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.
சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் பிளேக் நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.