இலங்கையைப் போன்று இலண்டனிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்

இலண்டன் நகரத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்வதற்குத் திட்டமிட்ட சபீயா ஷயிக் என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை குண்டுத்தாக்குதலின் முக்கியஸ்தரான சஹ்ரான் ஹஷீம் அப்துல், லதீப் மொஹமட் ஜமீல் என்பவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என தெரியவந்துள்ளது. அப்துல் லதீப் மொஹமட் ஜமீலை 2006 , 2007ஆம் ஆண்டுகளில் சயீபா ஷயிக் பிரித்தானியாவில் சந்தித்துள்ளார்.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் போன்று இலண்டனில் உள்ள பிரபல தூய பவுல் தேவாலயத்தையும், பிரபல சுற்றுலா ஹோட்டல்களையும் இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்வதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய சபீயா ஷயிக் என்ற பிரித்தானியப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண், இணையம் ஊடாகப் பயங்கரவாதம் பற்றி அறிந்து கொண்டதாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அபு வலீட், அல் முஹஜிரோன், என்ஜம் சவுத்ரி போன்ற பயங்கரவாதிகளின் கொள்கைகளை அவர் கொண்டிருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு தாக்குதல் மேற்கொள்ளவிருந்த அப்துல் லதீப் மொஹமட் ஜமீல் 2006ஆம் ஆண்டு இலண்டன் நகரத்தில் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது இந்த பெண்ணுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரதான பிரதிநிதியாக என்ஜம் சவுத்ரி பிரித்தானியாவில் செயற்பட்டுள்ளார். அவரது போதனைகளை சஹ்ரான் ஹஷீமும் அவரது குடும்பத்தினரும் கற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!