ரணிலைப் பதவியிலிருந்து அகற்ற வலியுறுத்துவோம் – நவீன் திஸாநாயக்க
“ஐக்கிய தேசியக் கட்சியை சரியான பாதைக்கு எடுத்துச் செல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவை தலைமைப் பதவியில் இருந்து நீங்குமாறு வலியுறுத்துவோம்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் பலம் மிக்கதாகக் கட்டியெழுப்புவோம் எனவும் அவர் உறுதியளித்தார்.
வளப்பனை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி சென்றிருப்பவர்கள் தொடர்பில் நாங்கள் கவலைப்படமாட்டோம். அவர்கள் சென்றாலும் கட்சி ஆதரவாளர்கள் எங்களுடனே இருக்கின்றனர். அதனால் கட்சியைவிட்டு செல்லாமல் கட்சியைப் பாதுகாத்த ஆதரவாளர்களைத் தேர்தலுக்கு பின்னர் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.