இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியாவில் தீவிர சோதனை!
வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் நேற்று (05) அதிகாலை முதல் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தனர்.
கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்புப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்தே இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
ஆலயங்களைச் சூழ ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டதுடன், வீதிகளிலும் பரவலாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.