மைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று பொலனறுவையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.