தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
திங்கள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் சிறுவர் இல்லத்தால் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.