விபத்தில் மொறட்டுவப் பல்கலை மாணவன் பலி
இன்று காலை பூநகரி வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் மொறட்டுவப் பல்கலைக்கழக கணிய அளவையியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவன் மோகன் ஆகாஷ் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், கல்லூரியின் மேசைப்பந்து, கிரிக்கெட் அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார்.