வெள்ளவத்தையில் தீ!
வெள்ளவத்தை, டபிள்யு சில்வா மாவத்தையிலுள்ள கடைத் தொகுதியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், காலி வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.