சிவாஜிலிங்கம் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் இக்கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தை பருத்தித்துறை நீதிமன்றில் முனிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!