நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் 3ஆவது ஊடகவியலாளருக்கும் கொரோனா!

நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் மற்றுமொருவருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர் ‘மவ்பிம’ பத்திரிகையைச் சேர்ந்தவராவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!