125 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா
மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளிலும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுகள் ஐந்துக்கும் மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டத்தின் போது மக்கள் கட்டாயமாக சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த காலப்பகுதியில் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும்.
அத்துடன் தனிமைப்படுத்தலில் உள்ள 125 பொலிஸாருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் 25 வயதான இளைஞன் உயிரிழந்தமைக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளமையே காரணமாகும்.
எவ்வாறாயினும் அந்த பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.´ என்றார்.