மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு 9ஆம் திகதி வரை நீடிப்பு

“மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீங்கப்படாது. எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும்.”

– இவ்வாறு கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன், அநாவசியமாக பொது வெளியில் நடமாடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!