78 பொலிஸாருக்குக் கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் பொரளை பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேரும் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, அவர்களுடன் தொடர்பிலிருந்த பொலிஸார் 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையங்கள் தொற்று நீக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பணிமனைகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் மக்கள் அச்சமின்றி பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!