இரண்டாவ்து பாராளுமன்ற ஊடகவியலாளருக்கு கொரோனா
சிங்கள பத்திரிகை ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றத்துக்குச் சென்ற இரண்டாவது ஊடகவியலாளருக்கும் தற்போது கொரேனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவதாகக் கொரோனா தொற்றுக்குள்ளானவர், ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளராவார்.
பாராளுமன்றச் செய்தியாளர்கள் இருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையடுத்து அவர்களுடன் பாராளுமன்றத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஏனைய ஊடகவியலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.