20ஆவது மரணம் பதிவு 8 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 20ஆவது மரணம் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று மரணமான பெண்ணுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குறித்த பெண், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 12 (புதுக்கடை) ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். இறுதியாக கடந்த 27ஆம் திகதி இலங்கையில் 17ஆவது, 18ஆவது, 19ஆவது கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன.

இலங்கையில் கொரோனாவால் இதுவரை 13 ஆண்களும், 7 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் சிக்கி கடந்த 8 நாட்களில் (ஒக்டோபர் 22 – ஒக்டோபர் 30 வரை) 7 பேர் (4 ஆண்கள், 3 பெண்கள்) உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!