மஹிந்தவை சந்திக்க பொம்பியோ திட்டமிடவில்லை
“அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது. அதனாலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மைக் பொம்பியோவைச் சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கவும் இல்லை.”
– இவ்வாறு பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனுராதா ஹேரத் தனது ருவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்திக்காமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
உண்மையில் ஆரம்பத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மைக் பொம்பியோவைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை.
பொம்பியோவின் மிகக் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது” – என்றுள்ளது.