தான் தப்புவதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை கையில் எடுத்தார் மனோ – சுமந்திரன்

 
“மரணதண்டனைக் கைதி துமிந்த சில்வாவைத் விடுவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்திட்டு தவறான ஒரு செயலைச் செய்ததில் இருந்து தான் தப்புவதற்காக அரசியல் கைதிகள் விடயத்தைத் தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கையில் எடுத்துள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான மனுவில் கையெழுத்திடக் கோரியபோது, இப்போது வேண்டாம் என்று சுமந்திரன் தெரிவித்தார் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!