குருநாகல் நகரம் முடக்கப்பட்டது
குருநாகல் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு குருநாகல் நகர சபைத் தலைவர் துஷார சஜ்ஜீவ விதாரண அறிவித்துள்ளார்.
குருநாகல் சபை ஊழியர்கள் 6 பேர் உள்ளிட்ட இரண்டு மீன் வியாபாரிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகர சபை ஊடாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே அவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் வில்கொடை பகுதியில், தொழிலாளர் குடியிறுப்பில் வசிக்கும் 17 குருநாகல் நகர சபை ஊழியர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, அவர்களில் 6 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குருநாகல் வில்கொட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.