கொழும்பில் ஊரடங்கு நேரத்தில் எம்.பியின் மகனுக்கு திருமணம்
கொழும்பில் நட்சத்திர விடுதியொன்றில் இன்று இடம்பெற்ற பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுடைய திருமண வைபவம் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இந்தத் தகவலைத்தெரிவித்தார்.
மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகனுடைய திருமணமே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி திருமண விழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.