புனானை பல்கலைக்கழகம் கொரோனா நிலையமாக மாற்றம்
மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவினால் கட்டப்பட்டபல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக்க குமார இந்த தகவலை தெரிவித்தார்.
இதன்படி சுமார் 1,200 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.