முடிவு எடுக்க வேண்டியது இலங்கையே – பொம்பியோ
அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டிய முழுமையான சுதந்திரம் இலங்கைக்கு உள்ளது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கியிருக்கும் பல்வேறு விடயங்களில் இந்த ஒப்பந்த யோசனையும் ஒன்று. இந்த ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கம் நல்லது என்று நோக்கினால் கைச்சாத்திட முடியும். அது அவர்களுடைய விருப்பம். அமெரிக்கா – இலங்கைக்கு இடையே இருக்கின்ற தொடர்பினை குறித்த ஒரு ஒப்பந்தத்திற்குள் வரையறுக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு இலாபம் ஈட்டித்தரும் பல திட்டங்களில் ஒன்றாகும்.
எம்.சி.சி ஒப்பந்தத்தைத் தவிர, அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் பல திட்டங்கள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.