மன்னார் வைத்தியசாலைக்கு கிருமி தொற்று நீக்கும் நவீன இயந்திரம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் காணப்படும் நிலையில் ´கொரோனா´ தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, இன்றைய தினம் காலை கிருமி தொற்று நீக்கும் நவீன இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.
வட மாகாண கட்டிட நிர்மாண சங்கத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் சமூக சேவையாளருமான டக்சன் கிருமி தொற்று நீக்கும் நவீன இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அலுவலகர் ஒருவரிடம் இயந்திரத்தை வழங்கி னார்.