இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும்,கொம்பனி வீதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்   இருவரும் உயிரிழந்துள்ளனர்.

87 வயதுடைய பெண் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக சுகயீனத்துடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19 வயதுடைய இளைஞன் பிறப்பிலிருந்தே விசேட தேவையுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!