துமிந்தவுக்கு பொதுமன்னிப்புவழங்கக் கோருகின்ற மனுவில்

கையெழுத்திட மறுப்பு

மரணதண்டனைக் கைதியான மஹிந்த அணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் ஆளும் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் இந்த மனுவில் கையெழுத்திட மறுத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!