இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமர் சந்திப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.