இலங்கையில் கொரோனா மரணம் 16ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச்  சேர்ந்த 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

 , இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3ஆவது மரணம் இதுவாகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!