20 க்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கட்சியின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
28 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொழுத்துடன் கூடிய கடிதம் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க எடுத்த தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.