இலங்கையின் ஜனநாயகத்தை கொலைசெய்தது ராஜபக்ச அரசு – ஹர்ஷ டி

“இலங்கை என்ற எங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ராஜபக்ச அரசு கொலை செய்துள்ளது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடரில் அவர் மேலும் கூறியதாவது:-

“20ஆவது திருத்தச் சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்காக  பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளது ராஜபக்ச அரசு.

இதனூடாகத் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்துக்கு எதிராக ராஜபக்ச அரசு எதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!