வவுனியாவில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அரசமைப்பின் 20ஆவது சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து வவுனியாவில் வெடி கொளுத்திக் கொண்டாடப்பட்டது.
வவுனியா நகரில் இன்றிரவு ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் வெடிகளைக் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.