20 இற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், 20ஆவது திருத்த யோசனையை ஆதரித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
20ஆவது திருத்தம் நாட்டிற்கு நன்மைவாய்ந்தது என்றும் அவர் இன்று சபையில் கருத்து வெளியிட்டபோது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றில் சற்றுமுன்னர் நிறைவேறிய 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி நஸீர் அஹ்மட், பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அரவிந்தகுமார் உள்ளிட்டவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்