இலங்கையில் 14 ஆவது கொரோனா நோயாளி மரணம்
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்: தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இவர் 50 வயதான பெண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 17ஆம் திகதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பெண் நாட்பட்ட நோயாளி; என்ற ரீதியில் அவதிப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட நாட்பட்ட நோயின் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் பதிவான 14 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளானவரின் மரணம் இது என தொற்று நோயியல் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அவர்கள் உறுதி செய்துள்ளார்.