ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாடு நேற்று (21) சிசிர த ஆப்ரூ, விஜித் மல்லல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் பிரதிவாதி சார்ப்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேற்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட காரணத்தினால் ஆஜராக முடியாமல் போனதால் வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் முறைப்பாடு தொடர்பில் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.