சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் நேற்று (21) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல முன்னிலையில்   குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதிவாதி 10,000 ரூபா ரொக்க பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு தொடர்பான அடுத்த வருடம் மார்ச் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதுடன் அன்றைய தினம் சாட்சிதாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!