பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்குக் கொரோனா கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மீன் சந்தை உடனடியாக மூடப்பட்டது.நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பேலியகொட மொத்த மீன் சந்தை வளாகம் பலர் கூடும் இடம் என்பதால் தொற்றுநோயியல் பிரிவால் விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி நேற்றுமுன்தினம் குறித்த பகுதியில் பல பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 100 பேரைத் தேர்ந்தெடுத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளின்படி, கொரோனாத் தொற்றாளர்கள் 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று களனி சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது. இதையடுத்தே மீன் சந்தை உடனடியாக மூடப்பட்டது. Related posts:திரையரங்குகள் 27 இல் திறப்புவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 315 பேருக்குக் கொரோனா இல்லை