தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ரிஷாட் பதியூதின்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதிடயுதீன் கைதிகளுக்காகன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்கமறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதனால் அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.