ஆமர் வீதி பொலிஸ் அதிகாரியின் மகள்களுக்குக் ‘கொரோனா’

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து   பெலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தநிலையில், ஆமர் வீதி பொலிஸ் நிலையம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!