ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒபாமா முடிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன்,ம் கமலா  ஹரிஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில் கடந்த 1 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற ட்ரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பிடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. 

இதையடுத்து ஜோ பிடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், வரும் 19-ம்தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 

இந்த நிலையில் ஜோ பிடன், கமலா ஹரிஸ் ஆகியோருக்கு  ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக  முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்காக அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரச்சாரத்தில் ட்ரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மற்றொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  கருத்துக்கணிப்பு முடிவுகளும் ட்ரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!