ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்?

தனியார் துறையில் தொழில் புரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 60 வயது வரை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளளார்.

எதிர்காலத்தில் தனியார் துறை ஊழியர்களிடம் இருந்து நாட்டிற்கு மேலதிக சேவைகளைப் பெறும் நோக்கில் இதனை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிலாளர் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பணியாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் அறிவிக்கப்படும் எனவும் அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பான சட்டக் கொள்கைகள் தயாரிக்கப்படும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!