துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பித்தல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌளியிட்டு அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டினுள் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதுகாப்பு அமைச்சில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!